Description
நூல் பெயர் : அண்டத்தின் ஆதாரப் பொருள்
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.220 /- பக்கங்கள் : 220
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
காலில் குத்திய முள்ளைப் பிடுங்கித் தூர எறிந்தபோதும் மேஜையின் செங்கோண முனை முழங்கையைப் பதம் பார்த்தபோதும் இந்த உலகம் மிகவும் நிஜமானது என்று நம்பினேன். இவை ஐம்புலன்களின் நேரடி அனுபவத்திற்குள் நிகழ்ந்தவை.
புலன் எல்லைக்கு அப்பாலுள்ளவற்றை டெலஸ்கோப்புகள், மைக்ராஸ்கோப்புகள், அல்ட்ரா ஸ்கேன்னர்கள், மாஸ் ஸ்பெக்ட்ராஸ்கோப்பிகள் முதலியன விரித்தும் பகுத்தும் காட்டியபோது, இந்த உலகம், மனத்தை மயக்கும் சந்தி காலத்தைப் போல நிஜமும் நிஜமல்லாததுபோலவும் தெரிந்தன.
பிரபஞ்சத்தைப் பொருளாகக் கருதினால் அதன் மாயத்தன்மை மறைகிறது. மாயத்தன்மையை அறியும் போது, பொருள் தன்மை மறைகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இயல்பியல் செய்துகொண்ட புரிதல்களின் தொகுப்பினை நூலாக உங்கள் முன் படைக்கிறேன். நீங்கள் இந்நூலில், கல்லையும் காணலாம், நாயையும் காணலாம் . இரண்டாகவும் இரண்டல்லதாகவும் ஒருசேர இருக்கும் சட இருப்பின் விசித்திரத்தையும் ரசிக்கலாம்.
மேலும் இந்நூலில் பொருள்முதல் வாதத் தோற்றம், இழைக் கொள்கை, அநிச்சய விதி, கெயாஸ் தத்துவம், இருள் பொருள், குழப்பவிதியின் படைப்பாற்றல், பேரண்ட வெளி, எல்லையிலாததை அறிய முடியுமா?, தனி முதல் காலம் உண்டா?, துகளா, அலையா?, ஷ்ரோடிங்கரின் பூனை, பொதுச் சார்பியல் போன்ற எராளமான விஷயங்கள் விளக்கப்படுகிறது.
Reviews
There are no reviews yet.