Description
நூல் பெயர் : “கடோபநிஷத்” விளக்கவுரை
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 350 /- பக்கங்கள் : 280
அபயம் பப்ளிஷர்ஸ் – 90956 05546
நித்திய வஸ்து அழியாதது. நித்திய வஸ்து தோன்றாதது, மறையாதது. நித்திய வஸ்து மாறாதது.
அப்படிப்பட்ட அழியாத நித்தியவஸ்து உண்மையில் உண்டா? அப்படி ஒரு வஸ்து இருந்தால் கட்டாயம் அது உழைப்பினால் (கர்மத்தால்) அடையமுடியாததாகத்தான் இருக்கும். ஏனெனில் உழைப்பு கால-இட-பொருளால் அளவுடையது, அநித்தியமானது. அநித்தியமான ஒன்றால் நித்தியத்தை அடையவே முடியாது. நித்தியமாக இருப்பதாலும் அது அடையத் தேவையற்றதாகவே இருக்கிறது. அப்படியானால் மனிதனால் நித்திய வஸ்துவை எப்படி அடைந்து நித்திய இன்பத்தில் இருக்கமுடியும்?
கர்மங்களால் நித்திய இன்பத்தை நிச்சயமாக அடையவே முடியாது. தர்மமான வாழ்க்கையிலாவது அதை அடையமுடியுமா? முடியாது. தர்ம வழியால் புண்ணியம் உண்டாகும். அதைக் கொண்டு இன்னொரு ச’ரீரத்தைப் பெறலாம். சொர்க்கத்தில் புண்ணியங்கள் தீரும்வரை இருந்துவிட்டு வரலாம். அது நித்தியமாகாது. எனவே தர்மம், அர்த்தம், கர்மம் ஆகிய மூன்றும் அநித்தியமே.
நித்திய வஸ்து அடையப்படுவதாக இல்லை என்றால், அது அடையப்பட்டதாக இருக்குமோ?
‘ஆம்’ .
அது அடையப்பட்ட வஸ்து! உன்னிடம் ஏற்கெனவே இருந்தும் உன்னால் அறியப்படாமலே இருக்கும் வஸ்து. எனவே இது அறியப்பட வேண்டியது, அடையப்பட வேண்டியதில்லை.
அடையப்படும் வஸ்துக்களுக்கு கர்ம ஸாதனங்கள் அவசியம். அறியப்பட வேண்டிய வஸ்துவுக்கு ஞான ஸாதனம்தான் தேவை.
Reviews
There are no reviews yet.