Description
நூல் பெயர் : மூளைக்குள் வாருங்கள்
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.220 /- பக்கங்கள் : 200
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
மனிதன் அடையும் இன்ப துன்பங்களுக்கு அவனது மனமே காரணம். மனத்திற்குக் காரணம் மூளை. மூளையை அறிந்து கொண்டால் அதன் காரியமாகிய மனத்தையும் இன்ப துன்பங்களையும் அறிந்தவர்களாவோம்.
மூளை எத்தனைவிதமான குறுக்கு வழிகளை எந்த மாதிரியான யுக்திகளை கையாள்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்கலாம்! ஏனென்றால் மூளை நிறைய பொய் சொல்லும்! எப்போது நம்பத் தகுந்த தகவலைத் தருகிறது; எப்போது அதை நீங்கள் நம்பக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
கம்ப்யூட்டர்களால் சிக்கலான கணக்குகளைச் சுலபமாக, சீக்கிரமாகச் செய்ய முடிகிறது. அது லாஜிக்கல் விதிகளைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் மூளையைப்போல் கம்ப்யூட்டரால் வேலை செய்ய முடியாது. இரண்டு வயது குழந்தை செய்யும் சாதாரண வேலையைக்கூட மிகப்பெரிய கம்ப்யூட்டரால் செய்ய முடியாது.
மூளை இன்னமும் பரிணாமமடைகிறதா? மூளையில் உணர்வு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது ? பயம், பதட்டம், மன தவிப்பு, வலியும் வலி நிவாரணமும்,மூலையில் போதைப் பொருள்களின் தாக்குதல், உடல் பருமன், குணாதிசயங்கள்,காதல்-கல்யாணம்,ஆண் பெண் வித்தியாசம்,நினைவு சக்தி, புத்திகூர்மை, முடிவெடுக்கும் திறன், ஆட்டிசம் போன்ற மன நோய்கள், ஆனந்தம் போன்ற விஷயங்களை நமது மூளை செயல்படுத்தும் முறையயைநாம் இந்த நூலில் அறிந்துகொள்ளல்லாம். பல சிக்கலான மூளை ஆராய்ச்சிகளையும் இங்கு விவரிக்கபடுகிறது.
எதுவாக மனிதன் ஆக விரும்புகிறானோ அதுவாக ஆக மூளைக்குள் பிரவேிசிக்க வேண்டும். மூளைக்குள் உங்கள் வரவு நல்வரவு ஆகுக!
Reviews
There are no reviews yet.