Description
நூல் பெயர் : “ஈசாவாஸ்ய உபநிஷத்” விளக்கவுரை
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 180 /- பக்கங்கள் : 120
அபயம் பப்ளிஷர்ஸ் – 90956 05546
உலகங்களை எல்லாம் இறைவன் படைக்கவில்லை; பின்னர் எப்படி வந்தது? இறைவனே அப்படி ஆகிவிட்டார்! குண்டூசி முதல் சூரியன் வரையிலான உயிரற்றவையும், புல் முதல் மனிதன் வரையிலான உயிருடையவையும் இறைவனின் தோற்றமே. ஸர்வம் சிவமயம் என்பதன் பொருள் இதுதான்.
பொருள்கள் யாவும் உன்னையும் சேர்த்து, சிவமாக இருப்பதால் அனுபவிக்கும் நீயும் அனுபவிக்கும் பொருள்களும் ஈசனே என்று தெரிந்தவன், எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னில் எல்லா உயிர்களையும் காண்கிறான். அவனிடம் வெறுப்பு எங்கிருக்கும் ? மோஹம் தான் எப்படி வரும் ?
ஆழமான ஆத்ம தத்துவ விளக்கங்களின் மூலம் அதுதான் கடவுள் என்று ஈசா’வாஸ்யோபநிஷத் கூறுகிறது.
விருப்பு வெறுப்புகளால் கர்மம் செய்வதை விட உபாஸனை தியானம் சிறந்தது. அதைவிட சிறந்தது அஹங்கிரக தியானம். ஆனால் இவை நிலையற்ற சொர்க வாழ்வையே தரும். இறைவனும் நானும் ஒன்று என்கிற அறிவே மோக்ஷம் என்கிற பிறவாநிலையை வழங்கும்.
Reviews
There are no reviews yet.