Description
நூல் பெயர் :எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.150 /- பக்கங்கள் : 126
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
பேக்டிரியா பாதி, மனிதன் பாதி சேர்ந்து கலந்து கலவை நாம். நம்மிடம் அனுகூலமான பேக்டிரியாவும் உள்ளன பிரதிகூலமான பேக்டிரியாவும் உள்ளன.
தாய்ப்பாலில் உள்ள நூற்றுக்கணக்கான சக்கரைகள் குழந்தைக்குப் பயனற்றவை ! அவை குழந்தைக்காக அல்ல ; குழந்தை வயற்றில் வளரும் அனுகூலமான பேக்டிரியாக்களுக்காக ! குழந்தையின் மூளையை வளர்க்கும் சியாலிக் அமிலத்தைத் தரும் பேக்டிரியாக்களுக்காக!
உண்ணும் உணவை ஜீரணம் செய்து தருவது, பின் செரித்த உணவிலிருந்து விட்டமின், மினரல் போன்றவற்றை விடுவித்து, இரத்தம் அவற்றை உறிஞ்சிக்கொள்ளும்படி செய்து தருவது பேக்டிரியாக்களே.
சில பேக்டிரியாக்கள் நம் உடல் எடையைக் கூட்டுவதும், சில உடல் எடையைக் குறைப்பதிலும் சமர்த்தாய் இருக்கின்றன.
நிம்மதி, திருப்தி, சமாதானம் போன்ற மன அமைப்பை தருவது குடலில் வாழும் பேக்டிரியாக்கள். குடல் சுற்றுச்சூழல் நலமாய் இருந்தால்தான் மனமும் நலமாய் இருக்கும்.
பேக்டிரியாவில் மனிதன் இருக்கிறானா? மனிதனில் பேக்டிரியா வாழ்கின்றனவா? ஒன்றின்றி ஒன்றில்லை என்கிற அளவுக்கு ‘அன்னியோன்ய சார்பு’ ஏற்பட்டுள்ளது.
சுத்தமாக இருப்பது என்பது கிருமிகள் இல்லாமல் இருப்பது என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டோம். சரியான கிருமிகளுடன் வாழ்வதுதான் சுத்தமாக வாழ்வது என்பதை இந்த நூல் உங்களுக்கு அறிவியல் பூர்வமான அராய்ச்சிகளுடன் விளக்கும்.
Reviews
There are no reviews yet.