Description
நூல் பெயர் : “ஐதரேய உபநிஷத்” விளக்கவுரை
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 200 /- பக்கங்கள் : 120
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
ஐதரேய உபநிஷத்தில் உள்ளவை மற்ற உபநிஷத்துகளில் உள்ளது போன்ற மந்திரங்கள் அல்ல. நீண்ட தொடர்ச்சியான பத்தியாகவே இந்த உபநிஷத் இருக்கிறது. வசதிக்காக இது மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயமும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் அத்தியாயம்
முதல் அத்தியாயம்- அத்தியாரோப அபவாதம் மற்றும் ஞானம் ஆகியவற்றைப் பொருளாகக் கொண்டுள்ளது. அத்தியாரோபம் என்பது ஜகத் சிருஷ்டியைக் கூறுவது. அபவாதம் என்பது சிருஷ்டிக்கப்பட்ட ஜகத், பொய் என்று நீக்குவது.
இரண்டாவது அத்தியாயம்
இரண்டாவது அத்தியாயத்தில் ஜீவனது ஸம்ஸார அவஸ்தைகள் கூறப்படுகின்றன. இதைப் படித்து நாம் வைராக்கியம் அடையவேண்டும் என்பதே நோக்கம். அடுத்து ஆத்ம ஞானம் பேசப்படுகிறது.
மூன்றாவது அத்தியாயம்
மூன்றாவது அத்தியாயத்தில் மஹாவாக்கிய விசாரம் உள்ளது. ‘ப்ரஜ்ஞானம் பிரம்ம’ என்பது விசாரிக்கப்படுகிறது.
Reviews
There are no reviews yet.