Description
நூல் பெயர் : காலம் (உன்னையும் உலகத்தையும் படைத்தது)
ஆசிரியர் : பேரா க.மணி
விலை ரூ. 250 /- பக்கங்கள் : 222
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
ஸ்டீஃபன் ஹாக்கிங் சிறந்த கணித-பேரண்டவியல் அறிஞராக இருந்தும் வெகு ஜனங்களின் சாமான்ய அறிவுக்கும் இறங்கிவந்து அவரால் பேசவும் எழுதவும் முடியும்! அவரது கழுத்துக்குக் கீழே எந்த உடலுறுப்பும் வேலை செய்யாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது உடலில் வேலை செய்பவை உள்ளுறுப்புகளும், மூளையும் மட்டும்தான்.
மனிதன் பிறந்ததன் முழுமையைப் பெற எது இருந்தால் போதும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரபஞ்சம், பேரண்டம், அகிலம், யூனிவர்ஸ் என்றெல்லாம் பெயர்கள் பல இருந்தாலும் நான் அகிலம் என்கிற பெயரையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
ஸ்டீஃபன் ஹாக்கிங் அகிலம் எப்படித் தோன்றியது, காலமும் இடமும் சேர்ந்து அதை வளர்த்து இன்றைய நிலைக்கு எப்படிக் கொண்டு வந்தது என்பதை ஒரு சாட்சியாக, அகிலத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதைப்போல எழுதுகிறார்.
அகிலம் என்றால் இரண்டல்லாத, பிளவு படாத ஒன்று என்று பொருள். ஒன்று, எப்படிப் பலவாகியது? என்பதை இந்நூல் சொல்கிறது. ஆதிமுதலான ஒரு பதார்த்தம், காலம்-இடம் என திரிந்து, உயிர்-உயிரற்ற பொருள்களைப் படைத்து ஏந்திக் கொண்டிருக்கிறது. அதுவே இந்நூலின் கரு.
Reviews
There are no reviews yet.