Description
நூல் பெயர் : தாவரங்களின் அதிசய உணர்வு
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.100 /- பக்கங்கள் : 96
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
தாவரங்களை, வழக்கமான பாடப் புத்தக கோணத்திலிருந்து பார்த்தால் அத்தனை சுவாரசியமாக இருக்காது என்பது உண்மையே.மாறாக மனித உள்ளத்தின் கோணத்தில் பார்த்தால் நம்மைப் போலவே தாவரங்களும் உலகில் வாழத் துடிதுடித்து, ஆதங்கப்படும் உயிரினமாகத் தெரிகின்றன. அப்போது அதிசயமான பல உண்மைகள் வெளிப்படுகின்றன. அவற்றிடமும் தந்திரங்கள், கற்பு, களவு போன்ற மனித குணங்கள் இரகசியமாகப் பரிணாமமடைந்திருப்பது தெரியும்.
தாவரங்களின் தியாகம், பாசாங்கு, போட்டி முதலான வாழ்வியல் நம்மைத் திகைக்க வைக்கின்றன. தாவர உலகின் மறைவான பகுதிகளை இந்நூலில் நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
தாவரங்கள் பேசிக்கொள்கின்றன. தாவரங்களுக்கும் தாய்ப்பாசம், தோழமை, பகைமை உணர்வுகள் உண்டு. மிருகங்களுடனும் பூச்சிகளுடனும் அவை போர் தொடுக்கின்றன. உலக உயிர்களுக்கெல்லாம் உணவும் வீடும் ஆடைகளையும் ஆற்றலையும் கொடுத்துக் காப்பாற்றும் தாவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இயற்கை முறையில் வேளாண்மை செய்து புவியைத் துன்புறுத்தாமல் வாழ்ந்து சிறக்க வேண்டாமா?
எல்லார்க்கும் இந்நூல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த நூல் தாவரங்களின் இரகசிய நடத்தைகளைப் பற்றியது.
Reviews
There are no reviews yet.