Description
நூல் பெயர் : “பதஞ்சலி யோக சூத்திரம்” விளக்கவுரை
ஆசிரியர் : பேரா க.மணி
விலை ரூ. 600 /- பக்கங்கள் : 496
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
பதஞ்சலி இயற்றித்தந்த யோக சூத்திரங்கள் சிறந்ததொரு யோக சாதனம்.
நவீன உளவியலுக்குச் சவால்விடும் அளவுக்கு யோக சூத்திரம் வழங்கும் மனோ தத்துவம் தனித் தன்மை கொண்டு விளங்குகிறது.
நவீன உளவியலில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் இல்லை. யோக சூத்திரப்படி வாழ்பவர்க்குப் பிரச்சனைகளே இல்லை.
மற்றவர் மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நோட்டம் விடுவதில் தினமும் ஆர்வம் காட்டும் நாம், நம் மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதே இல்லை. நம் மனத்தின் லக்ஷணம் மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது அதனால்தான் அவனா..! அவன் ஒரு முசுடாயிற்றே” என்று நம்மைப் பற்றி பேசுகிறார்கள். நமக்கு அது தெரிவதேயில்லை. நம் மனத்தை மற்றவர் அறிவதுபோல் நாம் அறிவதில்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
அன்று பதஞ்சலி செய்து வைத்த ஆயுர்வேத மருத்தவமுறை நூல் இன்று இல்லை. வேறு ஏதோ அவர் பெயரில் உலவிக்கொண்டிருக்கிறது. மேலும் அன்று உடலுக்கு வந்த நோய்களுக்கு பதிலாக புதிதாக எத்தனையோ நோய்கள் தோன்றியிருக்கின்றன. நோய்கள் கூடிக்கொண்டே போவதால் மருந்துகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் மனம் மட்டும் மனிதனுக்கு அப்படியேதான் இருக்கிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன் எந்த மனம் இருந்ததோ அதேதான் இன்றும் இருக்கிறது. மன நோய்களும் மாறவில்லை. அறிவில் மாற்றங்கள் வந்திருக்கலாம் மனத்தில் மாற்றம் இல்லை; அதே கோபம், பொறாமை, காமம், சந்தேகம் போன்ற மாசுக்கள் இன்றும் இருக்கின்றன.
இந்நூலின் நோக்கம் ஞானத் தேடலில் புகுந்திருக்கும் ஸாதகர்களின் ஞான நிஷ்டைக்கு உதவுவதற்காக உளவியல் பகுப்பாய்வு தருவது.
Reviews
There are no reviews yet.