Description
நூல் பெயர் : பயோடெக்னாலஜி
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.280 /- பக்கங்கள் : 280
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை குவாண்ட்ட இயலும் பொதுச் சார்பியலும் இயற்பியலை இமாலய உயரத்திற்குத் தூக்கிச் சென்றன. உயிரியலில் பெரிய மாற்றம் நிகழவில்லை.
தக்க கருவிகளும் உபகரணங்களும் இல்லாததால் உயிரியல் ஆராய்ச்சிகள் தேக்கம் கண்டிருந்தது. எலெக்ட்ரான் நுண்ணோக்கிகள், குரோமேட்டோ கிராஃபி நுட்பங்கள், மூலக்கூறு பௌதிகத் தந்திரங்கள் தோன்றியவுடன் உயிரியலில் புதுவெள்ளம் புறப்பட்டது.
டி.என்.ஏ மூலக்கூறின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்ட அதே தருணத்தில் புரோட்டின் மூலக்கூறுகளின் வடிவங்களும் தெரிய ஆரம்பித்தன.
அருங்காட்சியக சரித்திர அலங்காரமாக இல்லாமல், உயிரியல் மனிதனின் அன்றாட வாழ்வில் நுழைந்தது. சாதாரண விளக்க அறிவியலாக இருந்த நிலைமாறி தொழில்நுட்பமாக வளர்ந்தது. உயிரியலின் பிரமிக்கத் தக்க அதிவேக வளர்ச்சியை இப்போதே நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால், பின்னர் அதைப் புரிந்து கொள்வதே இயலாததாகிவிடும்.
உயிரியல் தொழில் நுட்பத்தைத் (பயோடெக்னாலஜி) தமிழில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற பரபரப்பு என்னுள் எழுந்தது. அதை உள்ளபடி அறிந்து கொண்டால்தான் தமிழ் மக்கள் உயிரியல் தொழில் நுட்பத்தைப் பற்றியச் சரியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள முடியும். பயோடெக்னாலஜியின் மீது கவிழ்ந்திருக்கும் அறியாமை இருட்டு அகன்றால் ஒழிய அதன் மீதான தேவையற்ற அச்சமும், அதன் காரணமாக உண்டாகும் எதிர்ப்பார்பும் அகலும் என்று தோன்றியது.
அடிப்படை உயிரியல் (பயாலஜி) அறிவு இல்லாமல், (பயோடெக்னாலஜி) உயிரியதொழில்நுட்பம் வளராது. தமிழகத்தின் கால்நடைகளையும் மூலிகைகளையும் பயிர்களையும் பூச்சிகளையும் விலங்குகளையும் அறிந்து கொள்ளாமல் இந்திய உயிரியத்தொழில் நுட்பம் வளர முடியாது.
வெளிநாட்டுச் சாதனங்களால் நமக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொள்ளவும்; அனைத்துத் தரப்பு வாசகர்களும் உயிரியத்தொழில் நுட்பத்தை உள்ளபடி அறிந்து, அதன் பலா பலன்களை எடைபோட்டு பிறகு அதன் எதிர்காலத்தைப் பற்றி தக்க முடிவினை எடுக்க வேண்டுமென்று இந்நூலை எழுதியிருக்கிறேன்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவியல் தொழில் நுட்பக் கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இந்நூலில் உள்ளன.
Reviews
There are no reviews yet.