Description
நூல் பெயர் : மனீஷாபஞ்சகம்
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 70 /- பக்கங்கள் : 72
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
எல்லா உயிரினங்களும் அவித்தியா எனும் தன் ஆத்மத் தத்துவத்தை அறியாததால் பிறக்கின்றன. பிறப்புக்கு அறியாமைதான் முதற்காரணம். ஆதலால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
நான் ஆத்மா என்று அறியும் உயிர்களுக்குப் பிறப்பில்லை. இந்த உண்மையை அறிவதற்குக் குறிப்பிட்டத் தொழில் செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. எனவே, செய் தொழில் வேற்றுமைகள் ஆத்மக் கல்விக்குத் தடையில்லை. தொழிலால் சிறப்பும் இல்லை.
ஆத்ம வித்தியா என்று அழைக்கப்படும் இந்தக் கல்வியைச் சங்கரர் மனீஷா பஞ்சகத்தில் தானே கேள்வி கேட்டுக்கொண்டு தானே அதற்குப் பதில் உரைக்கிறார்.
எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை, அவற்றால் உண்டாகும் சிறப்புகள் ஆத்ம ஞானத்திற்கு ஈடில்லை; அவை ஞானத்திற்குத் தடையுமில்லை.
இந்த உண்மையைத் தருபவர் சண்டாளனோ பிராமணனோ யாராயிருந்தாலும் அவரே என் சத் குரு என்று தீர்ப்பு சொல்கிறார் ஆச்சார்யர் சங்கரர்.
புதிய கோணத்தில் வேதாந்த சாரத்தைச் சங்கரர் நமக்கு மனீஷாபஞ்சகத்தில் வைத்துத் தந்திருக்கிறார். கற்றுத் தெளிக.
Reviews
There are no reviews yet.