Description
நூல் பெயர் : “அத்வைத மகரந்தம்” விளக்கவுரை
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 200 /- பக்கங்கள் : 164
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
அத்வைத மகரந்தம் தர்க்க நீதியுடன் சம்பிரதாய முறையில் சொல்லித்தரும் ஓர் அற்புதமான வேதாந்த சாஸ்த்திர நூல்.
இதைப் பலரும் அறியும் வண்ணம் உலகிற்கு அறிமுகப்படுத்தி அழகிய ஆங்கில உரையையும் தந்தவர் பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.
அவரது ஆங்கில உரையின் அடிப்படையில் நான் இதற்குத் தமிழில் உரை செய்துள்ளேன்.
லக்ஷ்மிதர கவி என்பவர் அத்வைத மகரந்த நூலைச் சமஸ்கிருத மொழியில் யார்த்தார். இது சங்கரருக்குப் பின் எழுந்த நூல். மரபு பிசகாமல் வேதாந்த விஷயத்தை முழுமையாக விளக்கும் நூல் இது.
‘வேதாந்த வகுப்பினைத் தத்வபோதத்தில் துவங்கி அத்வைத மகரந்தத்தில் முடிப்பேன்’ என்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் சொல்லுவதிலிருந்து இந்நூலின் சிறப்பு எத்தகையது என்பது தெரிகிறது. எனது அனுபவத்திலும் நான் கண்டவற்றுள் முரண்படு வார்த்தைகள் இன்றி, சொன்னது சொல்லுதல் இன்றி கனக்கச்சிதமான வேதாந்த நூலாக இது உள்ளது.
தமிழில் இந்நூல் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நான் எழுதினேன். கற்றுப் பயன் பெறுக.
Reviews
There are no reviews yet.