Description
நூல் பெயர் : “அபரோக்ஷ அனுபூதி” விளக்கவுரை
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 270 /- பக்கங்கள் : 180
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நான் யார்? இந்த உலகம் எப்படி உண்டானது? இது படைக்கப்பட்டதா? தானாகத் தோன்றியதா? படைக்கப்பட்டதென்றால் படைத்தவர் யார்? அவர் எங்கே? அவர் எப்படிப்பட்டவர்?
இப்படிப்பட்டக் கேள்விகள் எழாத மனிதனே இல்லை. இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலை யார் தருவார் என்றும், எந்தத் தத்துவம் தரும் என்றும் தெரியாமல் பலர், மதமும் மதபோதகர்களும் தரும் பதிலை ஏன், எப்படி என்று எதிர்க்கேள்வி கேட்காமலே உண்மை என்று அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கின்றனர்.
‘நீ கேள்! நான் பதில் தருகிறேன். உன் அறிவுக்குப் பொருந்தியிருந்தால் ஏற்றுக்கொள்’ என்று துணிச்சலுடன் சொல்லும் ஒரே தத்துவம் அத்வைத வேதாந்த தத்துவம்.
அத்வைத வேதாந்தம் என்று சொல்வதுகூட அதிகமே. வேதாந்தம்தான் அத்வைதம். உபநிஷத் எனப்படும் வேதாந்த சாஸ்திரத்திலிருந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலை அடைகிறோம். அத்வைதம் மட்டும் உண்மை என்று நான் எப்படி ஏற்பது?
அத்வைதம் என்றால் இரண்டற்றது.
உலகம், உயிர், இறைவன் ஆகிய முன்றும் இரண்டற்ற ஒன்றிலிருந்து தோன்றியவை என்பதை விளக்குவதுதான் அத்வைத வேதாந்தம். அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் மூன்றும் ஒன்றுதான் என்று விளக்குவது அத்வைத வேதாந்தம்.
உண்மையான காரணம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றுதானே விஞ்ஞானிகள் அத்தனை பாடுபட்டு, அத்தனை செலவு செய்து அணுக்கருவியல், பேரண்டவியல், உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.
உபநிஷத்துக்கள் வழங்கும் அத்வைத தத்துவத்தை நான் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று நீங்கள் நினைத்துவிட்டால் நீங்கள் வீடுபேறு எனும் முக்தியின் வாசற்கதவைத் திறந்துவிட்டீர்கள் என்று பொருள். அதற்கான திறவுகோல் போன்றது ஆதி சங்கரர் அருளிய அபரோக்ஷ அனுபூதி எனப்படும் இந்த நூல்.
அத்வைதத்தின் மையக் கருத்தான இறைவனும் உயிரும் ஒன்று என்கிற உண்மையை அறிந்தவன் அனைத்தும் அறிந்தவனாக, அனைத்து இன்பங்களையும் ஒரே சமயத்தில் அடைந்து நிறைவடைந்தவனாக ஆகிறான்.
Reviews
There are no reviews yet.