Description
நூல் பெயர் : கோமாவில் “நான் ”
ஆசிரியர் : பேரா க.மணி
விலை ரூ. 150 /- பக்கங்கள் : 132
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
குகைக்குள் மாட்டிக் கொண்டு எந்தப்பக்கம் வாயில் என்று தெரியாமல், உதவிக்கு யாரையும் அழைக்க வழியில்லாமல், வெளிவரத் துடிப்பவரின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
“கோமா” நோயாளி என்று கட்டிலில் கிடத்தி, குழாய் வழியாக உணவு வழங்கி வருடக்கணக்கில் மரக் கட்டையைப் போலக் கிடப்பவர்கள் லட்சக்கணக்கில் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் வீட்டிலும் உள்ளனர். அவர்கள் அரையிருட்டில் தவிப்பவர்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் நம்மிடம் புலன் உணர்ச்சிகளும் மன உணர்ச்சிகளும் எண்ணங்களும் இல்லை. கோமா எனும் நனவற்ற உறக்கத்தில் கிடப்பவர்கள் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களது புலன்களும் மனமும் என்ன செய்துகொண்டிருக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தபோது அதை என் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
உலக மக்களுக்கும் சொல்லவேண்டும் என்கிற பொறுப்புணர்வும் இருந்தது. அதனால்தான் இந்தப் புத்தகம். இந்நூலைப் படித்ததும் பலருக்குப் புதிராக இருந்தவை புரிந்துவிடும், பலருக்குப் புதிய புதிர்கள் எழுந்து தூக்கத்தைக் கெடுக்கும். தொடர்ந்து நான் உங்களுடன் இதுபற்றிப் பேசுவேன். இது தொடக்கமே!
‘இன்டு தி க்ரேஸோன்’ எனும் நூலின் ஆசிரியர் ஆட்ரியன் ஓவன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கண்டுபிடிப்பு களைத்தான் நான் இங்கு ஆதாரமாகக் கொண்டு வாதாடுகிறேன்.
Reviews
There are no reviews yet.