Description
நூல் பெயர் : 100 ஆண்டுகளாகப் பொதுச் சார்பியல்
ஆசிரியர் : பேரா .க.மணி
விலை ரூ.150 /- பக்கங்கள் : 200
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டு 100 ஆண்டுகள் முடிந்து அடுத்த நூற்றாண்டு துவங்கிவிட்டது.
நியூயார்க் டைம்ஸ் சேகரித்த கருத்துக் கணிப்பில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலை சிறந்த அறிஞர் என்று ஐன்ஸ்டின் தீர்மானிக்கப்பட்டார்.
சிந்தனைப் பரிசோதனையை துவக்கி வைத்தவர் ஐன்ஸ்டைன். இவரின் அடியொற்றி கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் இன்று கருவிகள் இன்றி அறிவில் செய்யப்படுகின்றன.
ஐன்ஸ்டைன் மிக முக்கியமான விஞ்ஞானியாகக் கருதப்படுவது ஏன்? இவர் எதற்காக நோபெல் பரிசு பெற்றார்? இவர் எந்த முறையில் கண்டுபிடிப்புகளைச் செய்தார்? இவரது கண்டுபிடிப்பால் உலக மக்களுக்கு என்ன பெரிய லாபம்? அறிவியலில் எந்த அளவுக்கு இவரது சிந்தனையின் தாக்கம் உள்ளது? தனி மனித, சமூக, அறிவியல் வாழ்க்கையில் இவர் எப்படி இருந்தார்? இவரது மூளையில் அப்படி என்ன விநோதம் உள்ளது? ஐன்ஸ்டைன் செய்த பிழைகள்என்ன ? சார்பியலின் விளைவுகள் என்ன ? போன்ற கேள்விகளுக்கு இந்நூல் சுருக்கமான பதில்களைத் தரும்.
அறிவியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சைன்டிஃபி அமெரிக்கன் மாத இதழ் வெளியிட்ட ஐன்ஸ்டைன் சிறப்பு வெளியீட்டிலிருந்தும் ‘ஐன்ஸ்டைன் அர்க்கைவ்’ களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி இந்நூல் எல்லாரும் வாசிக்கும்படி எளிமையாகத் தரப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.